பிளஸ்-1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை

பிளஸ்-1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை
X

தற்கொலை 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அருட்செல்வன் (வயது 16). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த மாணவன் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுகளில் பல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவன் தேர்வுக்கு படிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story