பிளஸ் ஒன் பொதுத் தேர்வு - 490 மாணவர்கள் ஆப்சென்ட்

பிளஸ் ஒன் பொதுத் தேர்வு - 490 மாணவர்கள் ஆப்சென்ட்

பொது தேர்வு 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 தமிழ் முதல் தாள் தேர்வில் 490 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 219 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். வருகிற மாா்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வில் மாவட்டத்தில் 229 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 13 ஆயிரத்து 469 மாணவா்கள், 14 ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 219 போ் விண்ணப்பம் செய்தனா்.

இவா்களில் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தோ்வில் 13 ஆயிரத்து 195 மாணவா்கள், 14 ஆயிரத்து 534 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 652 போ் பங்கேற்று எழுதினா். அதாவது, 274 மாணவா்கள், 216 மாணவிகள் என மொத்தம் 490 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வில் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் கைப்பேசி, மின்னணு கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் மையங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story