மதுரவாயல் அருகே பிளஸ் டூ மாணவி தற்கொலை !
மதுரவாயல்
மதுரவாயல் அருகே பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை.போலீசார் விசாரணை.
மதுரவாயல் அடுத்த வானகரம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரதிதேவி (40). இவர் கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மகள் கவிநயா (18). இவர் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நேற்று வழக்கு போல் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பியவர் தனி அறையில் சென்று படுக்கையறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். நேற்று இரவு நீண்ட நேரமாக கதவை அபிநயா திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். அப்போதும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கவிநயா மின்விசிறியில் புடவையால் தனக்குத்தானே தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவிநயா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், கவிநயாவுக்கு தலைவலி மற்றும் உடல் நலக் கோளாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும், அதில் தனக்கு உடல் நலக் கோளாறு இருப்பதாகவும் அதை யாரிடம் தெரிவிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story