மோடி சுட்ட வடைகள் - திமுகவினர் நூதன பரப்புரை

மோடி சுட்ட வடைகள் -  திமுகவினர் நூதன பரப்புரை

துண்டு பிரசுரம் வழங்கல்

மன்னார்குடி அருகே வடுவூரில் திமுகவினர் மோடி சுட்ட வடைகள் பரப்புரையில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுவூரில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இன்ரஜீத் முன்னெடுப்பில் மோடி சுட்ட வடைகள் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு வடைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை ஒன்றிய கழக செயலாளர் கவியரசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், திமுக கழக முன்னணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story