தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்:பிரதமர் மோடி இன்று சேலம் வருகை

தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்:பிரதமர் மோடி இன்று சேலம் வருகை

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சேலம் வருகை தர உள்ளதை அடுத்து பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தனி ஹெலிகாப்டர் மூலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார். அங்கு மதியம் 1 மணியளவில், சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி போலீஸ் டி.ஜி.பி., 4 டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 32 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மேடை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி வானில் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு இதனிடையே, சேலத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story