தர்மபுரி மக்களின் பல நாள் கனவை நிறைவேற்றிய பிரதமர்

தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை கணவாய் பகுதியில் உயர் மட்ட சாலை அமைக்கும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அரியானா மாநிலம் குருகிராமிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதை அடுத்து தொப்பூர் கணவாய் பகுதியில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் சாலை அமைக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டார். பிரதமர் காணொலி வாயிலாக இப்ப பணிகளை தொடங்கி வைத்தையொட்டி அனைவருக்கும் இனிப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் நிலையில் இத்திட்டத்தை பாரத பிரதமர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்து உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய காலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தருமபுரி மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார். மேலும் இந்த உயர் மட்ட சாலை அமைப்பதன் மூலம் இப்பகுதியில் ஏற்பட்டு வந்த தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும்,பாரத பிரதமர் காணொளி வாயிலாக இச்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்ததற்காக மகிழ்ச்சி எம்பி செந்தில் குமார் தெரிவித்தார்.

Tags

Next Story