பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து பிரசாரத்தில் பங்கேற்கும் பி.எம் மோடி !
பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்வார் என்றும் கன்னியாகுமரியில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுவார் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அவரது பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒரு நாள் முன்னதாக வருகிற 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் பொது கூட்டத்தில் மோடி பங்கேற்று பேச உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசும் போது கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Next Story