கன்னியாகுமரியில் இன்று 2ம் நாள்   சூரிய உதயம் பார்த்த பிரதமர் மோடி

கன்னியாகுமரியில் இன்று 2ம் நாள்   சூரிய உதயம் பார்த்த பிரதமர் மோடி

கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று 2ம் நாளாக தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தார்.  

கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று 2ம் நாளாக தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அன்று மாலை கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி அன்று இரவு தொடங்கிய நிலையில் நேற்று (மே.31) 2-வது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்தார்.

முன்னதாக நேற்று காலை, கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இன்று (1-ம் தேதி) மூன்றாவது நாளாக காலை விவேகானந்தர் நினைவு மண்டப வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பின்னர் கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை கண்டு சூரிய நமஸ்காரம் செய்தார்,

அதனை தொடர்ந்து தியான மண்டபத்திற்குள் சென்ற அவர் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

Tags

Next Story