பாரிவேந்தருக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி

பாரிவேந்தருக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி

பாரிவேந்தர் 

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரை மீண்டும் நாடாளுமன்றத்தில் சந்தி்க்க பேரார்வம் கொண்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராம நவமியை முன்னிட்டு, எனது சக காரியகர்த்தா என டாக்டர் பாரிவேந்தரை குறிப்பிட்டு அவருக்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்களின் ஆசிர்வாதத்துடன் பாரிவேந்தர் நாடாளுமன்றத்தை வந்தடைவார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பாரிவேந்தரின் தொலைநோக்கு அணுகுமுறை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வுடன் இணைந்து,மக்களுக்கு சேவையாற்றுவதாக மோடி பாராட்டி உள்ளார்.

இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கும், வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் பாரிவேந்தரின் பயணம் பாராட்டுக்குரியது என்று பிரதமர் புகழ்ந்துள்ளார்.தங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் தனக்கு பெரும் சொத்து - ஒரு அணியாக, தொகுதி மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல் பணியாற்றுவோம் என்றும் மோடி எழுதியுள்ளார். சமூகப் பணிகளுக்கான பங்களிப்புகள் மக்களின் இதயங்களை தொட்டிருப்பதாக பிரதமர் சிலாகித்து அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story