வாணதிராயபுரம் மக்களிடம் பாமகவினர் ஆலோசனை

வாணதிராயபுரம் மக்களிடம் பாமகவினர் ஆலோசனை

பாமக

கடலூர் மாவட்டம்,வாணதிராஜபுரம் அருகே என்எல்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாமக சார்பில் மக்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெய்வேலி என். எல். சி. யால் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாணதிராயபுரம் ஊராட்சி கிராம (வாணதிராயபுரம், தென்குத்து), மக்களை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் சந்தித்தார். பின்னர் மிகுந்த மன வேதனையுடன் அந்த மக்கள் என். எல். சி. யால் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறும் குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர் இராஜேந்திரன், பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், எழில்செல்வன், பிரகாஷ், மற்றும் சு. பா. கதிரவன் அந்த கிராமத்தை சேர்ந்த பெலிக்ஸ், பார்த்திபன், கொளஞ்சி, கோவிந்தராஜ், பாலு, சரவணன், அர்ச்சுணன் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story