பாமக வேட்பாளர் பிரச்சாரம்
வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் கடும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மயிலாடுதுறை தொகுதியின் எல்லை பகுதியான அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உலகப் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மாலைகள் அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் வாயிலில் இருந்த கடைகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மேலும் தலையாட்டி பொம்மைகளை பெண்களுக்கு விற்பனை செய்தும் பூ விற்கும் மூதாட்டியிடம் பூ வாங்கி அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். தொடர்ந்த அவர் பேசுகையில இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அம்மாபேட்டை ஒன்றியத்தை தாலுகாவாக தரம் உயர்த்தப்படும்,
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தொகுதியின் எல்லை பகுதியாகவும் இருக்கக்கூடிய புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புற காவல் நிலையம் அமைக்கப்படும், பொது மக்களின் நலன் கருதி அவசர கால பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்,
குடிநீர் தட்டுப்பாடை போக்கும் விதத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மாணவ மாணவியரின் நலன் கருதி அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, தமாகா, அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, தமமுக, ததேக, இமகமுக, இமக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் படை சூழ பேண்ட் வாத்தியங்களுடன் பட்டாசுகள் வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் தொண்டர்கள் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமுடன் வேட்பாளரை வரவேற்று வருகின்றனர். கடும் வெயிலில் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.