பாமக வேட்பாளர் பிரச்சார பொதுக்கூட்டம்

தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது

தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் தர்மபுரி பாமக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆதரித்து பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.இதில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி முன்னிலை வகித்தார்.

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தினர். இதில் தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே திட்ட பணியில் நடைபெற்று வருகிறது தொப்பூர் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதால் உயிர் சேதம் அதிகமாக நடைபெறுகிறது

இதனால் மேம்பாலம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி உபரி நீர் திட்டம் செயல்பட தொடங்கினால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்படும் இதனால் வெளிமாவட்டங்களில் வேலைக்கு சென்றுள்ளனர் மீண்டும் தர்மபுரி மாவட்டத்திற்கு திரும்புவார்கள் எனவே பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

பிறகு மருத்துவர் ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீடு பெற்று தந்துள்ளேன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மணி சங்கிலி போராட்டம் நடத்தி ஒகேனக்கல் கூட்டு நிறுத்த பெற்று கொடுத்தோம் எனவே தர்மபுரி மக்கள் மாம்பழம் தினத்திற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story