பாமக வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம்!
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பாலு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு மேல்பாடி, சின்ன கேசகுப்பம், வெப்பாலை, வீரத்தாங்கல், ஶ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், இளையநல்லூர், வாணிய காட்டூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் வேட்பாளர் பாலுவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் வேட்பாளர் பாலு பொதுமக்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
Next Story