காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக வேட்பாளர்

களஞ்சேரி சீதாராமன் சாஸ்திரியை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் களஞ்சேரியில் ஸ்ரீ வேத வித்யா குருகுலம் அமைந்துள்ளது. இதனை சீதாராமன் என்பவர் நடத்தி வருகிறார். இவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து பிரமணர்களுக்கு எதிராக ராட்சத கூட்டமான திரவிட கழகம், தி.மு.க போன்ற அசுர குணம் உள்ளவர்கள் அழித்து. நமக்கு பாதுகாப்பான ஆட்சிக்கொடுக்க ஆள் கிடைத்து விட்டார். அதேபோல் எல்லா பிரணமர்களும் தாமரை பூ சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும். பொய், புளுகு பேசி மக்களை ஏமாற்றி கெட்ட வழிக்கு அழைத்துக்கொண்டு போகிறார்வர்கள் கையில் தேசம் போக கூடாது எனப்தற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவரும் பிரணமர்களுக்கு ஒற்றுமை இல்லை என்பதை உடைக்க வேண்டும் என ஆடியோ ஒன்றை வெளயிட்டார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து நேற்று காலை சீதாராமன் வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்ற போது மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சீதாராமன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீதாராமனை தாக்கிய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனையடுத்து அவர்களிடத்தில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்

Tags

Next Story