போதக்காடு பகுதியில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதக்காடு பகுதியில் இன்று பிற்பகல் பாட்டாளி மக்கள் கட்சி விவசாய பிரிவு மாநில பொறுப்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஏற்பாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி, மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி தர்மபுரி மாவட்ட மக்களுக்கு போராடி பெற்று தந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேலும் தற்போது தீவிரமாக காவிரி உபரி நீர் திட்டத்திற்காக போராடி வருவதாகவும் அதனை நிறைவேற்ற தவறாமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.