தர்மபுரியில் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார் எம்எல்ஏ பேட்டி
எம்எல்ஏ ஜிகே மணி
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி கே மணி அளித்து பேட்டிகள் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அஜ்ஜனஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்குப்பதிவு செய்த பின்பு பென்னாகரம் எம்எல்ஏ ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். என்றும் இந்தியா முழுவதும் உள்ள தேசிய கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்
Next Story