சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாமக ஆலோசனை கூட்டம்

சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாமக  ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாமக சிறப்பு ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது.  

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாமக சிறப்பு ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் அன்புமணி ஆகியோரின் ஆலோசனை படி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாமக சிறப்பு ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் தே.சாந்தமூர்த்தி தலைமையில் மேல்மருவத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு பெருவாரியான வாக்கு பெற்று தருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும், என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் இரா.பரந்தாமன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன்,மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story