பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
மாவட்ட செயலாளர் 
கடலூர் பாமக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (13. 06. 2024), வியாழக்கிழமை மாலை 4. 00 மணியளவில் நெய்வேலி என்‌. எல். சி‌ பாட்டாளி தொழிற்சங்கம் அலுவலகத்தில் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தேசிய ஜனநாயக கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வருகின்ற 16. 06. 2024 மற்றும் 17. 06. 2024 ஆகிய தேதிகளில் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியிலும் 24. 06. 2024 மற்றும் 25. 06. 2024 ஆகிய தேதிகளில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலும் வாக்காள பெருமக்களை நேரில் சந்தித்து நன்றி கூற உள்ளதால் அது குறித்து ஆலோசிக்கப்படும்.

எனவே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலை பாமகவினர் தவறாமல் கலந்துகொள்ளுமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story