பாமக செயற்குழு கூட்டம்

X
சங்ககிரியில் பாமக நகர செயற்குழு கூட்டம்
சங்ககிரியில் பாமக நகர செயற்குழு கூட்டம்
சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சார்பில் செயற்குழுக்கூட்டம் சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி நகர செயலாளர் ஐய்யப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் பாமக மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் பாமகவின் கொள்கைகள் குறித்து பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுக பகுதிகளில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது.மாவட்டத்தலைவர் முத்துசாமி, துணைத்தலைவர் பழனிமுத்து, நகரத்தலைவர் அர்ச்சுணன், முன்னாள் நகர செயலாளர் பாலமுருகன், கே.கே.ரவி, மோகன்ராஜ், விஜயிபிரகாஷ், சரவணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story
