பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாமக நிர்வாகிகள் கூட்டம்

பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வளாகத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வரும். 18 ம் தேதி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதனை முன்னிட்டு நடைப்பெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் பாடி செல்வம் கலந்து கொண்டு 18 ம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்,

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பிணர் சாமிக்கண்ணு,மாவட்ட துணை செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், ஊடகப் பேரவை மாவட்ட இணை செயலாளர் கவியரசன். ஊடக பேரவை மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மற்றும் ஒன்றிய ஊராட்சி, கிளை, பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story