அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினரை சந்தித்த பாமகவினர்
பாமகவினர்
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் தலைமையில் அம்மா மக்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்த பாமகவினர்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனைவர் செளமியா அன்புமணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தருமபுரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகளை சந்தித்து தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் சால்வை அணிவித்து வாக்குகள் சேகரித்தார் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் என இரண்டு அரசியல் கட்சியின் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
Next Story