பாபநாசத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ம .க ஸ்டாலின் பங்கேற்றார்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய பேரூர் கிளை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது .ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், விஜயராஜன் ,மனோகரன், ஒன்றிய தலைவர் ஐயப்பன் , முன்னாள் ஒன்றிய தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
அய்யம்பேட்டை பேரூர் தலைவர் காளிதாஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் , ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவருமான ம.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர், மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் ,மாவட்ட துணை செயலாளர் தங்க ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவன் பழனிச்சாமி, அண்ணாதுரை ஒன்றிய செயலாளர்கள் வேலுசாமி, வடுவையா, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் அழகேசன், சதாசிவம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ,ஒன்றிய செயற்குழு உறுப்பினர் முருகேசன் பேரூர்செயலாளர்கள் வினேத், முரளிதரன் செந்தில்குமார் முருகானந்தம் தலைவர்கள் சங்கர், சுப்ரமணியன், ஆகியோர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற செய்வது என்றும் மேலும் அந்தக் கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியை பாமக பெற்று பாமக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்றும் டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தபோது எதிர்பாராத மழையால் குறைந்த அளவு மகசூல் கிடைக்கப்பெற்றது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது .
தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் நஷ்டயிடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கொள்ளிடம் ஆற்றில் மேலராமநல்லூர் மேட்டு தெரு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் தஞ்சாவூர் விக்கிரவாண்டி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பாபநாசம் தாலுகாவில் உள்ள அம்மாபேட்டையை தனி தாலுகாவை அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் பாபநாசம் பேரூர் தலைவர் சுதந்திரராஜன் நன்றி கூறினார் பட விளக்கம் பாபநாசத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதி கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்