நெய்வேலியில் பாமக செயற்குழு கூட்டம்

X
நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பா.ம.க. கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலுார் தொகுதிக்குட்பட்ட பாமக வடக்கு மாவட்டத்தின் சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க தேர்தல் களப்பணியினை வாக்குச்சாவடி முகவர் மற்றும் பொறுப்பாளர்களும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுடன் இணைந்து திறம்பட செயலாற்றிட வேண்டும்.பாமக நிறுவனர் ராமதாஸ் இடஒதுக்கீடு கொள்கைகளை பற்றிய சீரிய சிந்தனை இல்லாமல் விமர்சனம் செய்த, தமிழக காங்கிரஸ் கட்சியினர்க்கு வடக்கு மாவட்டத்தின் சார்பில் கடும் கண்டனத்தை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. கடலுார் மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தின் விளைவாக, என்எல்சி நிறுவனம் நிலம், வீடு வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக பல அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது அது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. உடனடியாக அதனை நடை முறைபடுத்த வேண்டும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றாமல், சீர்கேடு அடைந்துள்ள வடக்குத்து ஊராட்சியை ஊராட்சி மக்களின் நலன் கருதி பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags
Next Story
