போக்சோ குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்முறை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மாரிமுத்து (25) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அதேபோன்று கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை சிலம்பம் கற்று கொடுப்பதாக கூறி கடந்த ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நாலாட்டின்புதூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சிலம்பம் ஆசிரியரான மாரியப்பன் மகன் மாரிக்கண்ணன் (44) என்பவரையும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாரிமுத்து மற்றும் மாரிக்கண்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.