சிறுப்பியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞருக்கு வலை
இளைஞர் மீது போக்சோ வழக்கு
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளி சந்தை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஜூன் 2023ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபருடன் ஆந்திராவில் குடும்பம் நடத்தினார்.
சிறுமி கர்ப்பமான நிலையில், அவரை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு இளைஞர் தலைமறைவானார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர்.
Next Story