விசாரணைக்கு ஆஜர் ஆகாத எஸ்ஐக்கு பிடிவாரண்ட்
நீதிமன்றம் உத்தரவு
போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாத எஸ்ஐக்கு பிடிவாரண்ட் - சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சாத்தனி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சிவா(21). இவர் இதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 17அன்று திருமணம் செய்து கொள்வதாக கூறி ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். அப்போது காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக இருந்த லெனின்அப்பாதுரை இந்த வழக்கை விசாரித்துள்ளார். தற்போது இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு சாட்சி சொல்வதற்காக எஸ்ஐ லெனின் அப்பாதுரை கடந்த 7மாதமாக ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி சரத்ராஜ், எஸ்ஐ லெனின் அப்பாதுரைக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வருகிற மார்ச் 14 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
Next Story