விஷம் குடித்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு!

விஷம் குடித்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு!

விஷம் குடித்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

இலுப்பூரில் உடல்நலக் குறைபாட்டால் விரக்தி அடைந்து விஷம் குடித்த உணவக தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இலுப்பூர், மேலப்பட்டி புதுநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(49). திருமணமான இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ளனர். உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் கடந்த பல நாள்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில்,இலுப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story