காவல்நிலையத்தில் விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு

X
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் வாலிபர் விஷமருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.`
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே அருளாட்சி திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன். இவரை வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாமினில் வந்த மகேந்திரன் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து நேற்று காலையில் காவல் நிலையம் வந்த மகேந்திரன், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி கையில் வைத்திருந்த விஷத்தை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் மகேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Next Story
