விசைத்தறி தொழிலாளிகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு
விசைத்தறி
விசைத்தறி தொழிலாளிகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், விசைத்தறி தொழிலாளிகளின் துயரம் தீர்க்காமல் போலீசாரே, விசைத்தறி முதலாளிக்கு துணை போவதை கண்டித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. வசம் மனு கொடுக்கப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் கூறியதாவது: அன்பு நண்பர்களே, மோடமங்கலம், வால்ராசபாளையம் மற்றும் ஆண்டி காடு மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளிலே உள்ள தறி தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கொத்தடிமையின் உச்சகட்டமாக அந்தப் பகுதியிலே தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலும் பயமும் குறைந்த கூலியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கே இருந்து தப்பி ஓடி வந்த ஒரு தொழிலாளி கௌதம் என்பவர் தன்னால் அங்கு வேலை செய்ய முடியவில்லை முதலாளியிடம் வாங்கிய ஒரு லட்சத்து 12 ஆயிரம் நான், மாதம் ஐந்தாயிரம் ஆக கட்டி விடுகிறேன் என்று எவ்வளவோ கூறியும் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், குமாரபாளையம் காவல் துறை நீ அங்குசென்று வேலை செய் இல்லையேல் பணத்தை கட்டு இல்லாவிட்டால் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக வழக்கு போடுவோம் என மிரட்டி வேலை செய்து அந்த கடன் பணத்தை கழி என்று அந்த தொழிலாளியிடம் எழுதி வாங்கிக் கொண்டு, மீண்டும் பழைய முதலாளியிடம் வேலைக்கு அனுப்புகிறார்கள். இதற்கு ஒரு மாதம் முன்பாகவே அந்த தொழிலாளியை பணம் கேட்டு கடத்த முயற்சி நடந்ததால் கொத்தடிமை புகார் கொடுத்து குமாரபாளையம் காவல் நிலையத்திலேயே விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அந்த தொழிலாளியை மீண்டும் அதே முதலாளியிடம் அடிமையாக அனுப்புவதற்கு காவல்துறை ஒத்துழைப்பது மிக வருத்தமாக உள்ளது. கொலைவெறியோடு 6 மாதமாக துரத்தும் முதலாளிகளிடம் அத்தொழிலாளிக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? இது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் விருந்தோம்பல் பிரிவு சார்பில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் உரிய புகார் மனு கொடுத்து இதற்கு தீர்வு காண முயற்சி நடைபெறுகிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் அனைத்து தொழிலாளர் அமைப்புகளும் பக்கபலமாக இருந்து உதவ வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுடைய நிலையை மாற்றுவதற்கு இந்த முயற்சி எடுப்பது தலையாய கடமையாகும்.
Next Story