பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை.

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை.

பரமத்தி வேலுார் பேருந்து நிலையம் 

பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த வாகனங்கள் மீது வேலூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பரமத்தி வேலுார் பேருந்து நிலையத்திற்கு சேலம், நாமக்கல், மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருச்சி, மோகனூர், முசிறி, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரமத்திவேலூர் பேருந்து நிலையம் உள் வளாகத்தில் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக்கூண்டு அருகே நிறுத்திக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது.

வேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி' தலைமையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பரமத்திவேலுார் பேருந்து நிலையம் வளாகத்தில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 3 ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த வாகன உரிமையாளரிடம் இனிமேல் பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது எனவும் ஆட்டோ ஸ்டாண்டில் மட்டும் நிறுத்த வேண்டும் அறிவுறுத்தினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் மற்றும் மற்றும் கார்களை நிறுத்தினால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என வேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி எச்சரித்தார்.

Tags

Next Story