கல் உடைக்கும் இயந்திரத்தை திருடிய 5 பேரை போலீசார் கைது
போலீசார் கைது
ஓசூர் அருகே 21 இலட்சம் மதிப்பிலான கல் உடைக்கும் இயந்திரத்தை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரியை அருகே சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் ,நெடுஞ்சாலை துறையினர் சார்பில் பாலம் கட்டுமான பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த நிலையில் கடந்த 17 தேதி அன்று காலை சுமார் 1.1/2 டன் எடைக்கொண்ட சுமார் 21 இலட்சம் மதிப்பிலான (எக்ஸ்வேட்டர் பிரேக்கர் ) என்னும் கல் உடைக்கும் இயந்திரம் காணாமல் போனதை கண்டு இயந்திர ஆப்ரேட்டர் அதிர்ச்சி அடைந்தார் . இதன் சம்மந்தமாக இயந்திர ஆப்ரேட்டர் ஜெகநாதன் மற்றும் தனியார் நிறுவனர் பங்குதாரருமான ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்கா அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருண் 35 என்பவர் பிப்ரவரி 20 தேதி அன்று அளித்த புகாரில் பேரில் சூளகிரி காவல் ஆய்வாளர் திருமதி ஆர் தேவி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் பிப்ரவரி 22 தேதி அன்று 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில், 21 இலட்சம் மதிப்பிலான கல் உடைக்கும் இயந்திரத்தை திருடி சென்றது ஒப்புக்கொண்டனர். இதன் சம்மந்தமாக இந்த திருட்டு வழக்கில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த செல்வம்(30) , தேன்கனிக்கோட்டை நாகமங்கலம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் (32), தேன்கனிக்கோட்டை கூட்டூர் பகுதியை சேர்ந்த நாராயணசாமி (42) , திராடி ,சூளகிரி பகுதியை சேர்ந்த ஆஞ்சி( 40) , கூட்டூர் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (36) ஆகிய 5 பேரை கைது செய்து ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
Next Story