காங்கேயம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த காவல்துறை

காங்கேயம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது ஒருவர் தப்பியோட்டம் காங்கேயம் காவல்துறை விசாரணை 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிக் கொண்டு சென்றபோது பொதுமக்கள் சந்தேகித்து காரை வழிமறித்து விசாரித்த போது 2வர் தப்பி ஓட்டம். பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் கீழே விழுந்து பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டான். அவனை காங்கேயம் காவல்துறையில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய திண்டுக்கல்லை சேர்ந்த முத்துராமனை தேடி வருகின்றனர். தொடர் ஆடு , மாடு,கோழி திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளவர்களையும் பிடித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினருக்கு கோரிக்கை. காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரமே ஆடு,மாடு,கோழி போன்ற கால்நடைகளை வைத்துக்கொண்டு வாழ்வாதாரம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் காங்கேயம்,வெள்ளகோவில்,ஊதியூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு,மாடு,கோழிகளை இரவு நேரங்களில் திருடி செல்வது தொடர்கதையாகவே உள்ளது. இந்த திருட்டுக்களை கட்டுப்படுத்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களே காவல் துறையினருடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில ஊர்களில் செக் போஸ்ட் அமைத்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காங்கேயம் காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் காடையூர் அருகே அடுத்த தோட்டத்தில் திருடுவதற்கு சுமோ காரில் காத்திருந்த போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகித்து சுமோ காரை நோட்டமிட்டுள்ளனர் அதில் 4 ஆடுகள் இருப்பதையும் அதில் இரண்டு குட்டிகளையும் பார்த்துள்ளனர். பின்னர் காரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் திடீரெனெ இருவரும் காரை விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர். இதில் ஒருவர் தடுக்கி விட்டு கீழே விழுந்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டான். பின்னர் அவனையும் திருடுவதற்கு பயன்படுத்திய சுமோ காரையும் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் முத்துராமன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகள் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்ட இருக்கலாம் எனவும் அவர்களையும் காங்கேயம் காவல்துறையினர் விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags

Next Story