அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது !
கைது
அகஸ்தீஸ்வரத்தில் அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சம்பவ தினம் டாக்டர் சூர்யா ரேஷ்மி என்பவர் பணியில் இருந்தார். அப்போது அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த வியாபாரி அருள் ராஜன் என்பவர் மது போதையில் அங்கு வந்துள்ளார். அவர் டாக்டரை தகாத வார்த்தைகள் பேசி நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா என்பவர் தென்தாமரைக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அருள் ராஜனை கைது செய்தனர்.
Next Story