கள்ளச்சாராயம், போதை பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் குறித்து திருத்தணி போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையிலான போலீசார் திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் கள்ளச்சாராயம், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களிடையே கள்ள சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதை பொருள் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தனர். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அதைவிட பெரிய போதை ஏதும் இல்லை என அறிவுரை வழங்கினார். மேலும் கள்ளச்சார விற்பனை நடைபெற்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தொலைபேசி எண்ணில் (6379904848) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தனர்

Tags

Next Story