அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
விழிப்புணர்வு கூட்டம்
உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வனிதா வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமை தாங்கி, மாணவர்கள் ஒழுங்கீனம் குறித்து விளக்கினார். அப்போது மாணவர்கள் சீருடையை ஒழுங்காக அணிந்து வர வேண்டும். முடி வெட்டி பக்குவப்பட்ட மாணவனாக திகழ வேண்டும். பள்ளிக்கு வந்து வகுப்பறையை கட் அடிக்காமல் நல்ல மாணவர்களாக இருக்க வேண்டும் உட்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார்.உதவி தலைமை ஆசிரியர் மோகன்ராம், முதுகலை ஆசிரியர்கள் பிரேமா, சுமதி,உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story