சேலம் அருகே அனுமதியின்றி எருதாட்டம் போலீஸ் தடியடி

சேலம் அருகே  அனுமதியின்றி எருதாட்டம் போலீஸ் தடியடி


சேலம் மாவட்டம் பெரியகவுண்டாபுரம் மந்தைமேடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில், நேற்று அனுமதியின்றி எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


சேலம் மாவட்டம் பெரியகவுண்டாபுரம் மந்தைமேடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில், நேற்று அனுமதியின்றி எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பெரியகவுண்டாபுரம் மந்தைமேடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில், நேற்று அனுமதியின்றி எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார், வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர், அனுமதியின்றி எருதாட்டம் போட்டி நடத்த முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாலை 5 மணி முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர், நேற்று 50-க்கும் மேற்பட்ட காளைகளை திடீரென அப்பகுதி மக்கள், இளைஞர்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். இதை தடுக்க முயன்ற, காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு என 3 பேர் காயம் அடைந்தனர். அதேபோல், வாழப்பாடி தாசில்தார் கார் மீது காளை மாடு ஏறி சேதமடைந்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர் போலீசார் தடியடி நடத்தி, அப்பகுதியில் இருந்த பொதுமக்களை, இளைஞர்களை விரட்டி அடித்தனர்.

Tags

Next Story