சங்ககிரி அருகே போலீசார் குவிப்பு: பரபரப்பு

சங்ககிரி அருகே போலீசார் குவிப்பு: பரபரப்பு

போலீசார் குவிப்பு 

சங்ககிரி அருகே போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி சின்ன ஏரி பகுதியில் கழிவுநீர் சுத்தகரி நிலையம் அமைக்க ரூ.8 கோடியே 80 லட்சம் மதிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டு துவங்கப்பட்டது.

இவ்விடத்தில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பணி செய்ய வந்த பொழுது 60 அடி உயர் மின் கோபுர கம்பத்தில் மேலே ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பணி நிறுத்த வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் ஏடிஎஸ்பி கண்ணன் தலைமையில், சங்ககிரி டிஎஸ்பி ராஜா முன்னிலையில் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி தாசில்தார் அறுவடைநம்பி, நகராட்சி ஆணையாளர் சேம்கிங்ஸ்டன் மற்றும் பணியாளர்களுடன் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இப்பணியை செய்ய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story