சைலன்ஸர்களை பறிமுதல் செய்யும் போலீசார்

சைலன்ஸர்களை பறிமுதல் செய்யும் போலீசார்
X

சைலன்ஸர்கள் பறிமுதல்

அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை துரத்தி பிடிக்கும் காவல்துறையினர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் பிடித்து அபராதம் மற்றும் எச்சரித்து அனுப்பும் தீவிர நடைமுறைகளானது கடந்த 5 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 2,500 க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த செயல் தென்காசி மாவட்ட மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக ஒலி எழுப்பும் புகை போக்கிகளை (சைலன்ஸ்ர்) பொருத்தி சாலைகளில் வாகனங்களை இயக்கம் வாகன ஓட்டிகளை தற்போது தீவிரமாக தென்காசி போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், கடந்த இரண்டு தினங்களில் 100க்கும் மேற்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய புகைப் போக்கி (சைலன்சர்) பொருத்திய வாகனங்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் , பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.
Next Story