செய்யாறு பகுதியில் தொடரும் பைக் திருட்டு, காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?
செய்யாறு பகுதியில் தொடரும் பைக் திருட்டு, காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மோரணம் காவல் எல்லைக்குட்பட்ட ஏனாதவாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி இவர் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போனது குறித்து மோரணம் காவல் துறையில் புகார் செய்தார்.
பின்னர் செய்யாறு பகுதிக்கு வந்தபோது மின்வாரியம் அலுவலகம் எதிரே அதே பைக் நம்பர் பிளேட், சைடு லாக் ஆகியவற்றை உடைத்து நின்று இருந்தது. பின்னர் அந்த பைக்கை கொண்டு வந்த நபரை விசாரித்த போது அவரது நண்பர் வாகனத்தை கொடுத்ததாகவும்அதை நான் கொண்டு வந்தேன் .இதன் பின்னணி விவரம் எனக்கு தெரியாது, எனது நண்பனிடம் தான் விசாரணை செய்ய வேண்டும் என கூறினார் .திருடு போன பைக் மின்வாரிய அலுவலகம் எதிரே நிறுத்தி இருந்ததால் அங்கே பொதுமக்கள் திரளாக கூடினர்.
பின்னர் தகவல் அறிந்த செய்யாறு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பைக் குறித்தும், அதன் உரிமையாளர் குறித்தும், பைக்கை ஓட்டி வந்த நபர் குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் மோரணம் காவல் எல்லைக்குட்பட்ட மேல் பூதேரி, தூளி உள்ளிட்ட இடங்களிலும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே ஒரே நாளில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்யாறு சரக்கத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போவது, அவற்றை திருடும் கும்பல்கள் வாகனங்களை பிரித்து விற்பனை செய்வதும் தொடர்கதையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.