பிரதமர் வருகையை முன்னிட்டு போலீசார் குவிப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு போலீசார் குவிப்பு

கோவையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிகிக்கப்பட்டுள்ளனர்.  

கோவையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிகிக்கப்பட்டுள்ளனர்.

கோவை:பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

தொடர்ந்து மாலை பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மைதானத்துக்கு செல்கிறார்.இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வருகை தர உள்ளார்.பின்னர் இங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 2.35 மணிக்கு பல்லடம் செல்கிறார்.அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார்.

பின்னர் பிரதமர் மோடியும், அண்ணாமலையும் வாகனத்தில் ஏறி ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல உள்ளனர்.இந்த நிலையில் பிரதமர் மோடி வரவிருக்கும் சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விமானப்படைத்தள வளாகத்தை சுற்றிலும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அதே போல கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை தள வாயில்களுக்கு அருகில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதேபோ பிரதமரின் வருகையை ஒட்டி விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு இன்று போலீசார் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Tags

Next Story