2,300 லிட்டர் சாராய ஊறல் - கொட்டி அழித்த போலீசார்

2,300 லிட்டர் சாராய ஊறல் - கொட்டி அழித்த  போலீசார்

அழிக்கப்பட்ட சாராய ஊறல்

கல்வராயன்மலை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 2,300 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, வண்டகப்பாடி மேற்குமலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 8 பேரல்களில் இருந்த 2,300 லிட்டர் சாராய ஊறலை சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். மேலும், இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிச்சன் மகன் ஜெயராஜ் என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story