மதுரையில் போலீஸ் தேர்வு-கமிஷ்னர் லோகநாதன் ஆய்வு

மதுரையில் போலீஸ் தேர்வு-கமிஷ்னர் லோகநாதன் ஆய்வு

கமிஷ்னர் ஆய்வு 

சென்னை வெள்ளம் குறித்த தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை - மாநகர காவல் ஆணையர் பேட்டி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 3,359 காலிப் பணியிடங்களை நிரப்பிட இரண்டாம் நிலை காவலர் நேரடி எழுத்துத்தேர்வு (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்பு துறை காவலர்) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

இதில் மதுரை மாவட்டத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, யாதவா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி என மொத்தமாக 13 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதற்காக காலை 8.30 மணி முதல் தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் 9480 ஆண்கள், 1260 பெண்கள் என மொத்தம் 10,740 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு மையங்களில் காலை முதலே ஆர்வமுடன் வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு தேர்வு மையங்களில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு காலை 10:00 மணி முதல், 12:40 வரை நடைபெற்றது. முன்னதாக தேர்வாளர்கள், தேர்வு மையங்களுக்குள் தேர்வு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை நகல் , பால் பாயிண்ட் பேனா நீலம் அல்லது கருப்பு மை பேனா கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வுமையம் முன்பாக ஒலிப்பெருக்கி மூலமாக கைப்பை, மொபைல் போன், புளுடூத் மற்றும் எலக்டரானிக்ஸ் சாதனங்களை கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தினர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டு தேர்வு கண்காணிப்பு பணிகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் லோகநாதன் பேசுகையில் : மாநகர் முழுவதும் தேர்வுமையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உரிய சோதனைக்கு பின்னர் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளையோ, வீடியோக்களையோ பதிவு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாநகர காவல்துறை. மூலமாக தொடர்ந்து சமூகவலைதளங்கள் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

Tags

Next Story