கணவனை தாக்கிய மனைவி மீது வழக்கு பதிவு

கணவனை தாக்கிய மனைவி மீது வழக்கு பதிவு

வழக்கு பதிவு 

சேலத்தில் கணவனை தாக்கிய மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் குகை ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் மைதிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மைதிலி கணவரிடம் கோபித்துக்கொண்டு செவ்வாய்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

நேற்று முன்தினம் பிரபாகரன், மனைவி மைதிலியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மைதிலி, அவரது குடும்பத்தினர் பிரபாகரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story