நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
கொடி அணிவகுப்பு
நாகப்பட்டினம் திட்டச்சேரியில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
நாகப்பட்டினம் திட்டச்சேரியில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஒரிசா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. இக்கொடி அணிவகுப்பானது திட்டச்சேரி காவல் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு திட்டச்சேரி கடைத்தெரு வழியே சென்று நடுக்கடையில் நிறைவு பெற்றது மேலும் இவ்வனி வகுப்பில் ஒரிசா காவல்துறையினர், நாகை மாவட்ட தாலுகா காவல்துறையினர், மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், என சுமார் 300 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story