100 சதவீதம் பொதுமக்கள் பதற்றமின்றி வாக்களிக்க காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு
திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் பொதுமக்கள் பதற்றம் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவிகிதம் பொதுமக்கள் பதற்றமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு. வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி தமிழக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் எந்த வித தயக்கமும் இன்றி 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும், பொது மக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய சரக உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் காங்கேயம் பாளையம் புதூர் பகுதியிலிருந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காங்கேயம் சாலை ராஜூ நகர் சந்திப்பு பெரிய கடைவீதி என முக்கிய சாலையின் வழியாக சென்ற கொடி அணிவகுப்பு தாராபுரம் சாலையில் நிறைவுற்றது.இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் தெற்கு காவல் ஆய்வாளர். கணேஷ்குமார்,உதவி ஆய்வாளர்கள், ரஜினிகாந்த் கார்த்திகேயன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரும் காவலர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story