கீழ்வேளூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸ்சார் கொடி அணிவகுப்பு

கீழ்வேளூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸ்சார் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸ்சார் கொடி அணிவகுப்பு.
தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாகை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதியும், திருவாரூர் மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் படி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்,மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விரமாகவும், தேர்தலையொட்டி பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும், போலீஸ்சார், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன் படி கீழ்வேளூரில் நாகை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி, தலைமையில் டி.எஸ்.பி. கார்த்திகேயன், பயிற்சி ஏ.டி.எஸ்.பி. லலித்குமார், கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், காவல் துணையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமான கீழ்வேளூர் வடக்கு வீதியில் புறப்பட்டு கீழவீதி, தெற்கு வீதி, மேலவிதிமற்றும் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் போலீஸ்சார், ஒடிசா மாநில போலீஸ்சார், மாவட்ட ஆயுதப்படை போஸ்சார், தமிழ்நாடு சிறப்பு போலீஸ்படையினர் மற்றும் ஊர்காவல் படையினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story