காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் தர்மபுரி மாவட்ட பொது மக்கள் மனுக்கள் மீதான குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகின்றது அந்த வகையில் நேற்று புதன்கிழமை காலை 10 மணி அளவில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்டத்தின் செயல்பட்டு வரும் அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 74 மனுக்கள் பெறப்பட்டு 72மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதனை நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் என துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story