நாகப்பட்டினத்தில் காவல்துறை குறைதீர் முகாம்

நாகப்பட்டினத்தில் காவல்துறை குறைதீர் முகாம்

குறைதீர் முகாம் 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் எஸ்பி ஹர்ஷ் சிங் பொதுமக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 12 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள்: 8428103090 என்ற தொலைபேசி எண் மூலம் கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story