காவல் குறைதீர் முகாம் - மனுக்களை பெற்ற எஸ்பி
குறைதீர் முகாம்
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற முகாமில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் கலந்து கொண்டு 17 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story