கூடுவாஞ்சேரியில் மயங்கிய தாய் மகனை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

கூடுவாஞ்சேரியில் மயங்கிய தாய் மகனை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

காவல் நிலையம் 

மயங்கிய நிலையில் இருந்த தாய் மகனை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தில், இரண்டு நாட்களுக்கு முன், சபுரா பீவி, 85, மற்றும் அவரது மகன் பியாரோ நிஜான், 64, ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் இருந்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்த பயணியர், அவர்களுக்கு உணவு, குடிநீர் வாங்கி கொடுத்து விசாரித்தனர்.

அப்போது, ஒருவர் வந்து விட்டுச் சென்றதாக தெரிவித்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்த சமூக நல ஆர்வலர்கள், நகராட்சி துணைத் தலைவர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அவர்கள் இருவரிடமும் விசாரித்தனர். அ

ப்போது, சபுரா பீவி மற்றும் அவரது மகன் பியாரோ நிஜான் இருவரும், சென்னை, சேத்துப்பட்டில் வசித்ததாகவும், அவர்களது வீட்டை உறவினர்கள் பறித்துக் கொண்டு, ஆதனுாரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு விட்டுச் சென்றதாகவும் கூறினர். இருவரும், வயது மூப்பின் காரணமாக வேலைக்கு செல்ல இயலாததால், வீட்டை விட்டு வெளியேறி, யாரோ ஒருவரின் ஆட்டோவில் இங்கு வந்து சேர்ந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போலீசார், இருவரையும் ஆதனுாரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

Tags

Next Story